14 மே, 2014

இந்திய பத்திரிகையாளர்களை வெளியேற்றும் பாகிஸ்தான் 
பாகிஸ்தானில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர்கள் ஸ்ரீனிகேஷ் அலெக்ஸ் பிலிபஸ், மற்றும் மீரா மேனான் ஆகிய இருவரும் ஒருவாரத்திற்குள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 
பாகிஸ்தான் அரசு அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் விசா புதுப்பிக்கபட மாட்டாது என கூறி உள்ளது.ஆனால் அவர்களை வெளியேற சொல்வதற்கான காரணத்தையும் குறிப்பிடவில்லை.
 
இந்திய பத்திரிகையாளர்களுக்கு மற்ற வெளிநாட்டு பத்திரிகையாளர்களைவிட பாகிஸ்தானில் அதிக கட்டுப்பாடுகள் நிலவி வரும் வேளையில்,பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரீப் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும், மற்றும் ஊடக சுதந்திரம் மேம்படுத்தப்படும் எனவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.