புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014

மன்னாரில் கால்வாய் நோயை கட்டுப்படுத்த 4 வார காலம் தேவை 
மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  கால்நடைகளின் இறைச்சி பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல்
ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் நாட்டின் பல பாகங்களிலும் கால்நடைகளுக்கு ஏற்பட்டிருந்த கால்வாய் நோயின் தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் இனம் காணப்பட்டுள்ள விடயம் தொடர்பாகவும் மன்னாரில் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கால்வாய் நோயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் போது மன்னாரில் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கால்வாய் நோயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இன்னும் 4 வாரம் காலஅவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடுப்பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி இனம் காணப்பட்ட கால்வாய் நோயினை அடுத்து மன்னார் மாவட்டத்தில் மாடு வெட்டுதல் மற்றும் இறைச்சி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.இத்தடை தொடர்பாகவும் கூட்டத்தில் விசேடமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ad

ad