14 மே, 2014


தமிழ் ஈழத்திற்கான 16 அமைப்புகளை தடை செய்ததைக் கண்டித்து
சாஸ்திரி பவன் முற்றுகைப்போராட்டம்
சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆனூர் ஜெகதீசன் தலைமையில், த.பெ.தி.க. சட்டத்துறை
செயலாளர் வை.இளங்கோவன் முன்னிலையில் சாஸ்திரி பவன் முற்றுகைப்போராட்டம் இன்று நடைபெற்றது.


ஈழத்தமிழர்கள் 30 ஆண்டு கால அறவழிப் போராட்டத்தாலும்,30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தாலும் போராடி வந்த தமிழர்களின் போராட்டம் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம்தேதி முடிவுக்கு வந்தபிறகு, தமிழ் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் உலகளவில் பல நாடுகளில் வசித்து வருகிறார்கள்.  அவர்கள் அந்தந்த நாட்டு அரசியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஜனநாயக ரீதியில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகிற்கு கொண்டு வருவதை தடுக்கும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் தமிழ் ஈழத்திற்கான 16 அமைப்புகளையும் 424 தனி நபர்களையும் தடை செய்ததைக் கண்டித்து இந்த முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.