14 மே, 2014

சிறிலங்காவின் தடைப்பட்டியல் – ஆதாரங்களைக் கேட்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

David-Daly
தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தனிநபர்களையும், புலம்பெயர் அமைப்புகளையும் தடை செய்துள்ள போதிலும்,
அதற்கான ஆதாரங்களை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்திருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புக்கான தூதுவர் டேவிட் டலி தெரிவித்துள்ளார். 
சிறிலங்கா அரசாங்கத்தின் தடைப்பட்டியல் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமைப்பு ஒன்றைத் தடை செய்வது என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொறுத்தவரையில், மிகவும் பாரதூரமான விவகாரம்.
சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள தடைப் பட்டியலை ஏற்பதற்குத் தேவையான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.