14 மே, 2014

மூன்றாவது அணி அமையுமா? : ஜெ., பேட்டி
கொடநாட்டில் கடந்த 20 நாட்களாக ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா, இன்று பிற்பகலில் சென்னை வந்து சேர்ந்தார்.  சென்னை வந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் செய்தியாளர்கள்
கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர்,  ‘’நாட்டில் உள்ள பல கோடி மக்களை போலவே நானும் நாளை மறுநாள் வெளியாக உள்ள மக்களவை தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே ஒரு முடிவு எடுக்க முடியும். அதற்கு முன் இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார். 
மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு, ‘ இப்போது கூறுவதற்கு பதில் ஏதும் இல்லை’ என்று தெரிவித்தார்.