புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014


அதிமுக எம்.எல்.ஏ நெருக்கடி : முன்னாள் திமுக எம்.எல்.ஏ பேரன்கள் கைது
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது-40). இவரது மனைவி ரேணுகாதேவி (வயது-35). இவர்களுக்கு சங்கமித்திரா (வயது-11), குந்தவி (வயது-4) என என்ற குழந்தைகள் உள்ளனர்.


கார்த்திக், ரேணுகாதேவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன், ஊதியூர் அருகே, உள்ள சங்கரண்டாம் பாளையம் என்ற ஊரிலிருந்த ரேணுகாதேவியின் தாயார் வீட்டிற்கு சென்ற கார்த்திக் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரும்  துப்பாக்கியை காட்டி தன்னை மிரட்டி, குழந்தை குந்தவியை கடத்திச் சென்றதாக ஊதியூர் காவல் நிலையத்தில் ரேணுகாதேவி புகார் கொடுத்தார்.

இவ்வழக்கில் கார்த்திக், அர்விந்த் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, திங்கள்கிழமை காலை, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, வெளியில் வந்த இருவரையும், காங்கயம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சிவகுமார் அதிரடியாக கைது செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் உறவினர்கள் மற்றும் அவரது ஊர் மக்கள், காங்கயம் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருப்பூரில் இருந்து அதிரடிப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பில் கார்த்திக், அர்விந்த் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர். இதனால் கோபமடைந்த மக்கள், காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள நீதிமன்றத்தின் முன்பு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே கார்த்திக், அர்விந்த் இருவரும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கார்த்திக், அரவிந்த் இருவரும் முன்னாள் திமுக சட்ட மன்ற உறுப்பினரான கே.என்.சாமிநாதன் என்பவரின் பேரனாவார்கள். புகார் கொடுத்துள்ள ரேணுகாதேவி தற்போதைய பழனி எம்.எல்.ஏ வான வேணுகோபால் என்பவரின் நெருங்கிய உறவினாராவர். எம்.எல்.ஏ. வேணுகோபால் போலிசாருக்கு கொடுத்த நெருக்குதலே கார்த்திக், அரவிந்த் இருவரின் கைதுக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ad

ad