புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014

ஊழலில் சிக்கிய இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு 6 வருட சிறை 
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் ஒல்மேட்டுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 6 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
 
குறித்த முன்னாள் பிரதமர் ஜெருசலேமில் நகரமேயராக இருந்தபோது வீடமைப்புத் திட்டத்திற்காக ஊழல் மோசடியில் தொடர்புபட்டதாக இவ்வாண்டின் ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
 
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி டேவிட் ரோஷன், இந்தக்குற்றமானது தேசத்துரோகத்திற்கு ஒப்பானது என்று தெரிவித்து 6 ஆண்டு சிறை தண்டனையை வழங்கியுள்ளார்.
 
இஸ்ரேலில் ஊழலுக்காக தண்டிக்கப்படும் முதலாவது பிரதமராக இவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad