14 மே, 2014


நடிகை சங்கீதா மீது முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர்
பரபரப்பு புகார்
 

ஆதரவற்ற தெருநாய்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய, முன்னாள் பிரதமரின்  பெண் ஆலோசகர் உஷா, நடிகை சங்கீதா அவரது கணவர் கிரீஷ் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக
போலீசில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஜானகி நகரில் வசிப்பவர் உஷா சங்கர நாராயணன் (60). இவர் முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆலோசகர் ஆவார். நடராஜன் என்பவர் வீட்டில் உஷா சங்கர நாராயணன் வாடகைக்கு இருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு நாய்கள் மீது பிரியம். நான்கு தெரு நாய்களை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு பயிற்சி கொடுத்து தன்னுடனேயே வைத்துள்ளார்.
உஷா தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில் பாஸ்கரன் என்பவர் மனைவி கலையுடன் வசிக்கிறார். அவர்கள் உயர் ரக நாய் வளர்க்கின்றனர். அந்த நாயை பார்த்து உஷா வளர்க்கும் நாய்கள் குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு மூண்டது. உஷாவை வீட்டில் இருந்து காலி செய்ய வைக்கும்படி உரிமையாளரை வற்புறுத்தினார்களாம்.
உஷா மற்றும் கலை தங்கி இருக்கும் வீடுகளுக்கு அருகில் நடிகை சங்கீதா கணவர் கிரிஷ்சுடன் வசிக்கிறார். இவரும் உஷா வளர்க்கும் நாய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கலைக்கு ஆதரவாக சங்கீதா வந்தாராம். நடுத்தெருவில் சங்கீதாவும் அவரது கணவர் கிரிஷ்சும் தன்னை தரக் குறைவான வார்த்தை களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக உஷா வளசர வாக்கம் போலீசில் புகார் செய்தார். வீட்டை காலி செய்யாவிட்டால் நாய்களை கொன்று விடுவதாக எச்சரித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஐகோர்ட்டுக்கும் சென்றார்.
இதையடுத்து நடிகை சங்கீதா, அவரது கணவர் கிரிஷ், கலை அவரது கணவர் பாஸ்கரன், வீட்டு உரிமை யாளர் நடராஜன் மற்றும் அவரது மனைவி மீது வளசரவாக்கம் போலீசார் 294(பி) பொது இடத்தில் அநாகரீகமாக பேசுதல், 506(1) ஆயுதமின்றி கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலையில் நடிகை சங்கீதா வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அங்கு பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.
இது குறித்து நடிகை சங்கீதா,  ‘’என் மீது புகார் கொடுத்துள்ள உஷாவுக்கு 70 வயது இருக்கும். வயதில் மூத்த வரான அவருக்கு நான் எப்படி கொலை மிரட்டல் விடுப்பேன்.  இந்த பிரச்சினையை நான் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே உஷா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக புகார் மனு ஒன்றையும் தயாரித்துள்ளேன்.  எனது புகார் மனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்