புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014


தமிழர் பிஒரசினை வெளிநாடு வரை சென்று விட்டது .தீர்க்காவிடின் எகிப்து,லிபிய  நிலைமை தான் .அமைச்சர் குணசேகரா 
இலங்கையின் பிரச்சினையை நாமே தீர்த்து கொள்ளவில்லை என்றால் பிரச்சினை அதிகரிக்கும் எனவும் லிபியா மற்றும் எகிப்து நிலைமைகள் இதனையே சுட்டிக்காட்டுவதாகவும் சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பிரச்சினை ஒன்று தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.
எமது அரசியல் தலைவர்கள் இந்த பிரச்சினையை தீர்க்க வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தால், இந்த பிரச்சினையை எம்மால் தீர்க்க முடியும்.
நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர், தேசிய பிரச்சினை தொடர்பில் தீர்வை காண நாட்டில் சகல அரசியல் கட்சிகளுக்கு தெரிவுக்குழு ஒன்றுக்கு வர முடியாது போயுள்ளது.
நாட்டின் தேசியப் பிரச்சினை தொடர்பில் பொது இணக்கத்திற்கு வந்து உரிய அரசியல் அமைப்பு மாற்றங்களை செய்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.
இதனை செய்ய முடியாத காரணத்தினால், அந்த பிரச்சினை ஒவ்வொரு இடங்களுக்கு சென்றுள்ளது. அத்துடன் தேசியப் பிரச்சினை தற்போது சர்வதேசமயமாகியுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாது போனால், சர்வதேச சக்திகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும். அதனை தடுக்க முடியாது போகும்.
இதனை நாம் லிபியாவிலும் எகிப்திலும், சிரியாவிலும் கிரிமீயாவிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பார்த்துள்ளோம்.
இதன் காரணமாக அண்மை கால வரலாறு அனுவங்களை கவனத்தில் கொண்டு தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இடதுசாரிகள் கட்சிகள் அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை நாட்டின் தேசிய ஐக்கியத்திற்காகவே பணியாற்றி வருகிறது.
நாட்டை ஐக்கியப்படுத்தும் பிரச்சினையில் எந்த கட்சியுடனும் நாம் இணைந்து எந்த பேதங்களும் இல்லாது செயற்படுவோம்.
நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதே இடதுசாரி கட்சிகளின் அடிப்படை நோக்கம் எனவும் அமைச்சர் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad