புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

-

14 மே, 2014

புங்குடுதீவு-புவியியல்

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின்
போதுஇந்த ஏழுதீவுகளுக்கும் ஹோல்லந்தில் உள்ள இடங்களின் பெயர்களை சூடி மகிழ்ந்தனர்.அந்த வகையில் புங்குடுதீவுக்கு மிட்டில்ஹ்பெர்க் என்று நாமம் இட்டு அழைத்தனர் . யாழ்ப்பானதிலிருந்து தெற்கு பண்ணை பாலம் ஊடாக மனடைதீவு சந்தி அல்லைப்பிட்டி அராலி சந்தி வேலணை வங்களாவடி வேலனைதுறை கடந்து புங்குடுதீவுக்கான இலங்கையிலேயே பெரியதான வாணர் தாம்போதி மேலே பயணம் மேற்கொண்டால் புங்குடுதீவை அடையலாம்.
புங்குடுதீவு சுமார்ஆறு மைல்நீளமும் ஐந்து மைல் அகலமும் கொண்ட நால் புறமும் கடலால் சூழப்பட்டு வேலையுடன் நேரிய பேரு வீதியினால கடலினூடே இணைக்க பட்ட ஓரு பிரதேசமாகும். ஓரளவு சதுர வடிவில் இருந்தாலும் கேரதீவு ஓடான நீரேரியின் பிரிப்பினால் ப எழுத்து வடிவிலும் தோன்றும் .வட கிழக்கே வேலனைத்தீவினையும் மேற்கே நயினாதீவினையும் தென்மேற்கே தூரத்திலே நெடுன்தீவினையும் கொண்டு மத்தியிலே இத்தீவு சீராக அமைந்துள்ளதுஇ தீவின் தெற்குப் பகுதி உயர்வாகவும் வடக்கு பகுதி தாழ்வாகவும் காணபடுகிறது .
புங்குடுதீவில் பல வகையான தரை அமைப்புகளும் காணப் படுகின்றன.மடத்துவெளி கரை பகுதிகள் சீனி போன்ற தூய வெள்ளை பளிங்கு மணல் பகுதியாகவும் ஊரதீவு மட்டும் தீவின் தெற்கு பகுதி கரைகள் இளமைன்சல் மணல்பகுதியாகவும் இருகின்றன.மடத்துவெளி ஊரதீவு பகுதிகள் சமதரைகளாக அமைந்துள்ளன.மேல் பகுதி மணல் தன்மையாகவும் சட்டு கீழே நரை நிற மக்கியாகவும் இன்னும் கீழே நல்ல தரமான களிமண்ணாகவும் அமைந்துள்ளது.வல்லன் பகுதி மற்றும் வீராமலை பகுதிகள் விவசாயத்திற்கு சிறந்த சிறிய குறுநி கலந்த கருநிற நிலமாக உள்ளன.குரிசிக்காடு போக்கதை பகுதிக்கு மேற்கே மிக அசாதாரணமான வகையில் செம்மண் பகுதியாகக உள்ளது.பெருங்காடு இருபிட்டி தெற்கு போன்ற பகுதிகள் மேலே குறைந்தளவு மண்ணும் கட் பாங்கான கீழ் பகுதியாகவும் காணப்படுகின்றன.
இந்த தரை தோற்ற அடிப்படையில் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு இருபிட்டி வடக்கு வல்லன் பகுதிகளில் நெல் பயிர் செய்கைக்கு உட்படுத்த படுகின்றன. வல்லன் வீரமலை நடுவுதுருதி பகுதிகளில் மிளகாய் புகையில வெங்காயம் போன்றன தரமான முறையில் பயிரிடபடுகின்றன-சுமார் நாற்பது ஆண்டுகளின் முன்னே வரை பெரும்பாலான மேட்டு பகுதிகளில் சிறு தானியங்களான வரகு சமை குரக்கன் பயறு உழுந்து பயிர்கள் பயிரிடப்பட்டன.இவற்றை விட நிறைந்த பனை தென்னை வளம் மிக்க கிராமமாக புங்குட்தீவு திகழ்கின்றது. விருட்சங்களாக வேம்பு பூவரசு ஆள் அரசு இத்தி கதியால் முருங்கை சீமைகதியால் போன்றனவும் கடல்கரை ஓரங்களில் ஆவாரை கற்றாளை கள்ளி கொட்டனி போன்ற மருத்துவ குணாசெடிகளும் காணபடுகின்றன

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டுள்ளது.
பாய்க்கப்பலின் உருவத்தினைப் போன்ற நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ள இத்தீவானது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன் வேலணைத்தீவிலிருந்து ஆழம் குறைந்த 3 மைல் கடற்பரப்பினாற் பிரிக்கப்பட்டுள்ளது.
இத்தீவின் பிரதான நிலப்பரப்பு தவிர்ந்த ஊரதீவு பல்லதீவு கேரதீவு போன்ற சிறு தீவுகள் மழைக்காலங்களில் நீரினால் பிரிக்கப்பட்டும் கோடை காலங்களில் இணைந்தும் காணப்படுகின்றது.
1981ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின்படி 14 622 மக்கள் வாழ்ந்திருந்தனர்.
1991ம் ஆண்டு 17000 மக்கள் வாழ்ந்துள்ளனர் என மதீப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பௌதீக வளம
பௌதீக ரீதியாக புங்குடுதீவுக் கிராமத்தை நோக்கும் போது இத்தீவின் தென்கிழக்கே வீராமலைப்பகுதி உயரம் கூடிய பிரதேசமாகவும் வடமேற்கு நோக்கி படிப்படியாகத் தாழ்ந்து செல்வதைக் காணமுடிகின்றது.
மரி காலங்களில் வீராமலைப் பகுதி மற்றும் அதன் அயற் பகுதிகளிலிருந்தும் நீர் வழிந்தோடி கள்ளியாற்றுடன் சங்கமமாவதைக் காணமுடிகின்றது. இத்தீவின் தென்பகுதி உயரம் கூடியதாகவும் வடபகுதி தாழ்ந்ததாகவும் இருப்பதுடன் கேரதீவைச் சார்ந்த பகுதிகள் சதுப்பு நிலத்தை ஒத்த பண்புகளைக் கொண்டதாகவுள்ளன.
பொதுவாக இத்தீவின் சராசரி வெப்பநிலை 80′ பரணைற்றாகவும் வருடாந்த மழைவீழ்ச்சி 50″ க்கும் குறைவாக இருப்பதனாலும் வளம் குறைந்த நரைமண் தொகுதியே பெரும்பாலான பகுதிகளில் சிப்பி கலந்த மண்களிமண் ஊரிகலந்த மண் கொழுக்கிக்கல் கலந்த மண் என்பன காணப்படுகின்றன.
இத்தீவின் நீர் வளத்தினைப் பொறுத்தவரை 68.0 சதவீதமான கிணறுகளில் உவர்த்தன்மை கொண்ட நீரே காணப்படுகின்றன என அண்மைக்காலங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நன்னீர் வளம் ஆங்காங்கே தொட்டத் தொட்டமாக காணப்படுகின்றது.
இதனால் மக்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினையில் நீர்வளப்பயன்பாட்டுத் தன்மை முக்கியமான இடத்தினைப் பிடித்துள்ளது.
வரலாற்று நோக்கு
புங்குடுதீவுக் கிராமத்தில் வரலாறு தீவகத்தின் வரலாற்றுடன் மட்டுமல்லாது. யாழ்ப்பாணக்குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது.
வளவாய்ப்புகளைக் கொண்ட யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான மக்கள் போக்குவரத்தில் தீவுப்பகுதி உட்பட புங்குடுதீவு முக்கிய இடத்தில் அமைந்துள்ளமை தென்னிந்திய மக்களின் உள்வரவுக்கு உதவியிருக்கலாம்.
குறிப்பாக காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள பௌதீக மற்றும் அரசியல் மாற்றங்களால் மக்கள் இப்பகுதிகளில் வந்து வாழ்திருக்க நியாயம் உண்டு.
அதாவது தென்னிந்தியாவிலிருந்து வந்துள்ள மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்திற்குக் காலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இது மட்டுமல்லாது இத்தீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்துள்ளதைமக்கு பல்வேறு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஊதாரணமாக புங்குடுதீவு புளியடித்துறை என்ற தற்போது பயன்படுத்தப்படாத துறைமுகத்திற்கு அருகாமையில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.
இம்மரங்கள் அராபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன என்பர். ஏனவே அராபியர் இத்தீவுக்கு வந்து வர்த்தகத்தில் டுபட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
frontவல்லிபுரத்தில் கண்டு எடுக்கப்பட்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றி குறிப்பிட்டுள்ளது. தற்போதைய புங்குடுதீவையே முன்னர் பியாங்கு என அழைக்கப்பட்டுள்ளது. என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
பியாங்குச் செடிகள் அதிகமாக காணப்பட்டிருந்தமையால் பியாங்குதீபம் என அழைக்கப்பட்டிருந்த இத்தீவு காலப்போக்கில் பியாங்குதீவு எனவும் பின்னர் புங்குடுதீவு எனவும் மருவியதாக கொள்ள இடம் உண்டு.
தமிழ்நாட்டு மக்களின் தொடர்பு காணப்பட்டிருந்தமையால் அங்குள்ள புங்கநூர் ங்குடி என்ற இடப்பெயர்வு இத்தீவுக்கு அவர்களால் சூட்டப்பட்டிருக்கலாம்.
இஸ்லாமியர்களது படையெடுப்புக் காலத்தில் அவர்களது கொடுமையிலிருந்து தப்பி தமது கன்னிப் பெண்களை பாதுகாக்கும்
நோக்குடன் இத்தீவில் வந்து குடியேறினர் எனவும் அவர்களால் இடப்பட்ட )ங்குடி என்ற பெயர் காலப்போக்கில் மருவி புங்குடுதீவு என வழக்கில் வந்துள்ளது என கொள்பவர்களும் உளர்.
வேறுசிலர் புங்கமரம் நிறைந்து காணப்பட்டபடியால் புங்கு-உடு-தீவு என பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப் பொருள் கொள்கின்றனர். தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையால் புங்குடதீவில் சோழனோடை சோழம்புலம் பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.
ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் இத்தீவுக்கு கொங்கரடிவா எனவும் ஒல்லாந்தர் மிடில்பேக் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர்.
தீவுகளின் மத்தியில் அமைந்துள்ளமையால் மிடில்பேர்க் என பெயர்வைத்துள்ளனர் என்றே கொள்ள வேண்டும்.

விளம்பரம்

ad

ad