ஆட்சியைக் கைப்பற்ற யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்: பா.ஜனதா அறிவிப்பு
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும்,
எந்த கட்சியின் ஆதரவையும் ஏற்க பா.ஜனதா தயாராக உள்ளது.
272–க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் போட்டியிட்டோம். அது கிடைக்கப்போகிறது. இருப்பினும், ஒரே ஒரு எம்.பி.யை கொண்ட கட்சியாக இருந்தாலும், எங்களை ஆதரிக்க விரும்பினால், தேச நலன்கருதி அதை ஏற்றுக்கொள்வோம். பா.ஜனதா கூட்டணிக்கு 290 முதல் 305 இடங்கள் வரை கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 50 முதல் 55 இடங்கள் கிடைக்கும்.
இந்த தேர்தல் முழுவதும் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இது, நரேந்திரமோடியின் வெற்றி, பா.ஜனதாவின் வெற்றி. இவ்வாறு அமித் ஷா கூறினார்.