அதிமுக கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள 17வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராகவும் இருந்தார்
. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை காலை பஞ்சு மார்க்கெட் அருகில் மீனாட்சி சுந்தரம் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. இதில் தப்பியோட முயன்ற அவரை ஓட ஓட வெட்டி சாய்த்தது. இதையடுத்து அந்த கும்பல் தலைமறைவானது.
இந்த கொலை சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து 4 பேர் கைது செய்யப்பட்டது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. தொழில் போட்டியால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.