29 ஜூலை, 2015

அப்துல் கலாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்


 நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம்.

தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர் களும் நண்பர்களும் பலமுறை அழுத்தம் கொடுத்தார்கள்.
ஆனால் கலாம் அதில் ஈடுபாடு காட்டவே யில்லை. உன் திருமணத்துக்கு வருகை தரும் சாக்கிலாவது நாங்கள் இரா மேஸ்வரம் பார்க்கவேண்டும் என்று கலாமின் நண்பர்கள் சொன்ன துண்டு. ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது.
திருமணம் குறித்த கேள்விக்கு கலாமின் பதில்:
'திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக் கையும் வேறு. ஒரு குடும்பத் தலை வனாக நான் குடும்பத்துக்கும் நேர மும் உழைப்பையும் கொடுத்தாக வேண்டும். அங்கே என் இலட்சியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
இலட் சியமா, குடும்பமா என்றால் குடும்பம் என் இலட்சியத்துக்குப் பின்னால்தான். என்னுடைய இந்தக் கோட்பாட்டினால் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடக்கூடாது. ஆக, இறுதி வரை நான் இப்படி இருப்பதுதான் சிறந்தது. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்'' என்று தன் மீது அக்கறை செலுத்தி கேள்வி கேட்ட வர்களிடம் இந்தப் பதிலை அளித் துள்ளார் கலாம்