29 ஜூலை, 2015

துருக்கியின் கோரிக்கையை ஏற்று நேட்டோ இன்று அவசர கூட்டம்

துருக்கியின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேட்டோ அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது.
துருக்கியின் கோரிக் கைக்கு அமைய நேட்டோ செயலா ளர் நாயகம் Nஜன்ஸ் ஸ்டொல்டன் பேர்க் அங்கத்துவ நாடுகளுக்கு அவ சர கூட்டத்திற்கான அழைப்பை விடுத் துள்ளார்.
நேட்டோவின் முக்கிய தீர்மானங் கள் நிறைவேற்றும் வட அட்லான் டிக் கவுன்ஸிலின் 28 நேட்டோ அங் கத்துவ நாட்டு பிரதிநிதிகளுக்கும் துருக்கியின் கோரிக்கைக்கு அமைய அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக நேட்டோ அமைப்பு ஞாயிறன்று வெளி யிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள் ளது. நேட்டோ ஸ்தாபக வொ'pங் டன் உடன்படிக்கையின் நான்கா வது கட்டுரையின் அடிப்படையிலேயே துருக்கி இந்த அவசர கூட்டத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
துருக்கியில் கடந்த வாரம் 31 பேரை பலிகொண்ட தற்கொலை தாக்குதல் ஒன்று இடம்பெற்றதை அடுத்து அந்த நாடு இருமுனை தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
துருக்கி கடந்த வெள்ளி தொடக் கம் தனது நாட்டு எல்லையை ஒட் டிய சிரிய நிலப்பகுதி மீது இஸ்லா மிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருவதோடு மறுபுறம் வட ஈராக்கில் பி.கே.கே. குர்திஷ் பிரி வினைவாதிகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது.
"அண்மைய தினங்களில் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல்க ளின் அபாய நிலை குறித்து அவ தானம் செலுத்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் துருக்கி, தாம் எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும் கூட்டணி நாடுகளுக்கு அறிவுறுத்த எதிர்பார்த்துள்ளது" என்று நேட்டோ குறிப்பிட்டுள்ளது.
"நேட்டோ கூட்டணி நாடுகள் தற்போதைய நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதோடு துருக்கிக்கு தனது ஒற்றுமையை பாராட்டுகிறது" என்றும் நேட்டோ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நேட்டோ உடன்படிக்கையின் நான் காவது கட்டுரைக்கு அமைய அர சியல் ஆலோசனை பெற அங்கத் துவ நாடுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க ஊக்குவிக்கிறது.
கடந்த 1949 ஆம் ஆண்டு நேட்டோ கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின் னர் இந்த கட்டுரை நான்கின் கீழ் அந்த அமைப்பு பல முறை அவசர கூட்டங்களை நடத்தியுள்ளது. இதில் துருக்கி 2003 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததோடு போலாந்து 2014 இல் அவ்வாறான அவசர கூட்டத்தை அழைத்தது.
சிரியாவில் சிவில் யுத்தம் தீவிரம் அடைந்ததை அடுத்து தனது நாட்டு எல்லையை பாதுகாக்க துருக்கி நேட்டோவை கேட்டுக் கொண்டதற்கு அமைய nஜர்மனி, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகியன துருக்கியின் எல்லையில் தலா இரண்டு ஏவுகணை எதிர்ப்பு பட்டரிகளையும் அவைகளை இயக்க படையினரையும் கடந்த 2013 இல் நிறுவியது.
இந்நிலையில் வடக்கு ஈராக்கில் பி.கே.கே. இலக்குகள் மீது ஞாயிறு பின்னேரம் துருக்கியின் எப்.16 யுத்த விமானங்கள் தாக்குதல் நடத் தியதாக அந்நாட்டு பாதுகாப்பு வட் டாரம் மூலம் தெரியவருகிறது. தியாபகிர் மற்றும் ஹகுர்க் பிரதேச இலக்குகள் மீது யுத்த விமானங் கள் தாக்குதல் நடத்தியதாக குறிப் பிடப்படுகிறது
தியாபகிரில் சனியன்று இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் இரு படை யினர் கொல்லப்பட்டதற்கு 'பிரி வினைவாத தீவிரவாத அமைப்பே' காரணம் என்று துருக்கி இராணு வம் குற்றம்சாட்டியுள்ளது. குர்திஷ் பிரிவினைவாத அமைப்பான பி.கே. கேவை துருக்கி அதன் பெயர் கொண்டு சுட்டிக்காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார் குண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கும் பி.கே.கேவின் ஆயுதப் பிரிவு, தாக்குதலில் பலி யான படையினரின் எண்ணிக்கை எட்டுப் பேர் என்று உயர்த்தி குறிப் பிட்டுள்ளது. துருக்கியின் விமானப் படை சனியன்று நடத்திய வான் தாக்குதலில் தமது மூன்று போரா ளிகள் கொல்லப்பட்டதாகவும் பி.கே.கே. குறிப்பிட்டுள்ளது.
துருக்கியின் சிரியாவை ஒட்டிய எல்லை நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற தற்கொலை தாக்குத லில் குர்திஷ் செயற்பாட்டாளர்களே கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்தே துருக்கியில் பதற்றம் அதிகரித்தது.
இந்த தற்கொலை தாக்குதலுக்கு துருக்கி நிர்வாகம் ஐ.எஸ். மீது குற்றம் சுமத்துகிறது. ஆரம்பிக்கப் பட்டிருக்கும் இராணுவ நடவடிக் கைக்கு கால அட்டவணை இல்லை என்று துருக்கி பிரதமர் அஹமத் டவுடொக்லு குறிப்பிட்டிருக்கும் நிலை யில் இது ஒரு நீண்ட இராணுவ நவடிக்கையாக மாற வாய்ப்பு இருப் பதாகவும் நம்பப்படுகிறது.
துருக்கி தமது தளங்கள் மீது வான் தாக்குதல் நடத்தியதன் மூலம் அந்நாட்டுடன் 2013இல் செய்துகொள் ளப்பட்ட யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதாக பி.கே.கே. தரப்பு குறிப் பிட்டுள்ளது. தனி நாடு கோரி போரா டும் பி.கோ.கே. தென்கிழக்கு துருக் கியில் பல தசாப்தங்களாக நடத் தும் போராட்டத்தில் ஆயிரக்கணக் கானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையில் 2013இல் அமைதி முயற் சிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு இறுதி முடிவை பெறுவதில் தோல்வி கண் டுள்ளது.
இந்த பதற்றத்திற்கு மத்தியில் ஸ்தன்பூல் மாவட்டமான காசியில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையில் ஞாயிறன்று மோதல் ஏற்பட்டதோடு இவ்வார ஆரம் பத்தில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பில் இடதுசாரி செயற்பாட் டாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆர்ப் பாட்டக்காரர்களை கலைக்க பொலி ஸார் தண்ணீர்ப்பீச்சடித்து ரப்பர் புல்லட் தாக்குதல் நடத்தியதற்கு இடதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கற் கள் மற்றும் எரிகுண்டுகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் ஒருவரை கைது செய்ய துரத்திய பொலிஸார் மீது நெஞ்சில் துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டிருப்பதோடு அவர் மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி கொல்லப்பட் டுள்ளதாக அங்கிருந்து வரும் செய் திகள் குறிப்பிடுகின்றன.
அண்மைய தினங்களில் துருக்கி யில் பி.கே.கே. மற்றும் ஐ.எஸ். சந் தேக நபர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சுற்றிவளைப்புகளாலேயே ஸ்தன்பூல் நகரில் ஆர்ப்பாட்டம் வெடித் துள்ளது.
வன்முறையை தவிர்த்துக் கொள் ளுமாறு துருக்கி மற்றும் பி.கே.கே. இரு தரப்பையும் அறிவுறுத்தியுள்ள அமெரிக்கா, குர்திஷ் கிளர்ச்சியாளர் களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை துருக்கிக்கு இருப்பதாகவும் வலியு றுத்தியுள்ளது