29 ஜூலை, 2015

யாழ்.இந்திய துணைத்தூதரகம் அப்துல் கலாமுக்கு அஞ்சலி : அரைக்கம்மபத்தில் இந்திய தேசிய கொடி


மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமிற்கு யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று  அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
 
இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் இந்திய தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
 
துணைத்தூரக அலுவலகத்தினுள் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் படத்தின் முன்னால் இரங்கல் செய்தி எழுதுவதற்காக குறிப்பேடு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
 
யாழில் உள்ள அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமய பெரியார்கள், அரச அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.