29 ஜூலை, 2015

யாழ்.மாவட்ட செயலக மடல் நாளை வெளியீடு


யாழ். மாவட்ட செயலகத்தின் இவ்வருடத்திற்கான முதலாவது செயலக மடல் நாளை வெளியிடப்படவுள்ளது.
 
யாழ். மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில்  இடம்பெறும் அபிவிருத்தி மற்றும் விசேட சேவைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய மடல் காலாண்டிற்கு ஒரு முறை மீண்டும் இவ்வருடத்திலிருந்து வெளியிடுவதாக  மாவட்ட செயலகத்தால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் மாவட்டத்தின் முதலாவது பிரதேச செயலகமாகிய நெடுந்தீவு பிரதேச செயலகம் ஆகியவற்றின்  செயற்பாடுகளை உள்ளடக்கிய இவ்வருடத்திற்கான முதலாவது செயலக மடல் நாளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களால் வெளியிடப்படவுள்ளது.
 
இம் மடல் இலங்கையின் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும், மத்திய மற்றும் மாகாண அரசின் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.