29 ஜூலை, 2015

தமிழகத்தில் நாளை மறுநாள் அரசு விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை வியாழக்கிழமை காலை அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்
மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அசாம் மாநிலம், கவுகாத்தி கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

நாளை அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது. மாலை 7 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.