29 ஜூலை, 2015

யாழில் வடமாகாண பனை அபிவிருத்தி ஆய்வரங்கு


வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் வடமாகாண பனை அபிவிருத்தி ஆய்வரங்கு ஒன்று இடம்பெற்றது.
 
இன்று காலை 9மணியளவில் யாழ்.கிறின் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
 
மேலும் வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் கடந்த 22ஆம் திகதியிலிருந்து இன்று வரை இடம்பெற்றது.
 
குறித்த பனை அபிவிருத்தி வாரத்தில் 3 அம்சங்கள் உள்ளடங்கியிருந்தன.
கண்காட்சி,கலை நிகழ்வுகள், ஆய்வரங்கு என 3 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
 
இன்றைய பனை அபிவிருத்தி வாரத்தின் இறுதிநாளான இன்று பனை அபிவிருத்தி ஆய்வரங்கு ஒன்றும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இதில் பனை அபிவிருத்தியை மக்கள் எவ்வாறு முன்னேற்றுவது தொடர்பான ஆய்வரங்காக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
 
மேலும் இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண  பிரதம  செயலாளர் பத்திநாதன்,பனை அபிவிருத்தி சபை பணிப்பாளர் மோகனதாஸ்,  பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கோகுலதாசன், மற்றும்  யாழ்.பல்கலைக்கழக உயர் பீடாதிபதியும்,பேராசிரியருமான  மிகுந்தன் கலந்து கொண்டனர்.
-