29 ஜூலை, 2015

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட 5 பேரை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கினார் மைத்திரி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும், நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட
ஐந்து பேரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து  இடைநிறுத்தியுள்ளார்.
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்குணவர்த்தன, எஸ்.பி.நாவின்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய ஐந்து பேருமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், இவர்களின் உறுப்புரிமையை மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்ச போட்டியிட அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இவர்கள் ஐந்து பேரும், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.