29 ஜூலை, 2015

ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து சிங்கள ராவய அமைப்பினால் முறைப்பாடு


ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு சிங்கள் ராவய அமைப்பினால் பொலிஸ் அதிகாரியிடம் இன்று முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அம்முறைப்பாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவரிவாதிகள் இலங்கையினுள் இருக்கின்றார்களா என்பதனையும் ஆராயுமாறும் குறிப்பி்டப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்புடைய இலங்கையர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தமையை கருத்தில் கொண்டு சிங்கள ராவய அமைப்பு இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரதன் தேரர் தெரிவித்துள்ளார்.