29 ஜூலை, 2015

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் நடிகர் சங்கத் தேர்தலை 2 மாதத்துக்குள் நடத்த ஐகோர்ட்தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, சங்க உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கங்களின் பதிவாளர் நேரில் ஆஜரானார். நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார் எனவும் தேர்தல் நடத்துவதற்கான தேதி, அறிவிப்பு தொடர்பாக அவருடன் கலந்து ஆலோசித்துக் கொள்ளலாம்.

மேலும், தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆவணங்களையும் அவர் பெற்றுக்கொள்ளலாம், உத்தரவுகளையும் பிறப்பித்துக்கொள்ளலாம். இதன்பின்னர், தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கையை அக்டோபர் 9-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, சங்க உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கங்களின் பதிவாளர் நேரில் ஆஜரானார். நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார் எனவும் தேர்தல் நடத்துவதற்கான தேதி, அறிவிப்பு தொடர்பாக அவருடன் கலந்து ஆலோசித்துக் கொள்ளலாம்.

மேலும், தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆவணங்களையும் அவர் பெற்றுக்கொள்ளலாம், உத்தரவுகளையும் பிறப்பித்துக்கொள்ளலாம். இதன்பின்னர், தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கையை அக்டோபர் 9-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை அடுத்த 2 மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்  தேர்தல் விவகாரம் குறித்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.