புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2015

சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும் மெத்தப்பாடு படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ததேகூ வேட்பாளர் சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும் மெத்தப்பாடு படுகிறார்கள்.

சட்டம் படித்த ஒருவர் நாடாளுமன்றம் போகக் கூடாது என படித்தவாகளை பிடிக்காத ஒரு கூட்டம் சொல்கிறது.
இவர்கள் கஜேந்திரகுமார் கொழும்பில் அதுவும் கருவாக்காட்டில் பிறந்தவர் என்ற உண்மையை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
ஒருவர் எங்கு பிறந்தார் எங்கு வளர்ந்தார் என்பதையிட்டு யாருக்கும் ஒரு துளி கவலை இருக்கக் கூடாது. சுமந்திரன் தொழில் நிமித்தம் கொழும்பில் வாழ்கிறார். கொழும்பில் வாழ்ந்தாலும் இணுவில் மருத்துவ மனையில் பிறந்தவர்.
கொழும்பு றோயல் கல்லூரியில் படித்தவர். பின்னர் இயற்பியலில் இளம்அறிவியல் (Bsc in Physics) பட்டப்படிப்பை சென்னைப் பல்கழகத்தில் படித்து முடித்தவர். அதன் பிற்பாடு கொழும்பு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞராக (Advocate) வெளிவந்தவர். 1991 இல் தனது சட்டத்தொழிலைத் தொடங்கிய சுமந்திரன் உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதி மன்றம், வணிக உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் தோன்றி வாதாடி வருகிறார். 2001 இல் அவுஸ்திரேலியா மொனாஷ் (Monash) பல்கலைக் கழகத்தில் படித்து இணையம் மற்றும் மின்னணுவியல் (internet and electronic law) இரண்டிலும் LLM (Master of Laws) பட்டம் பெற்றவர்.
சுமந்திரனை கொழும்புத் தமிழர் என இழித்துப் பேசுபவர் தமிழ்மக்களின் ஒரே தந்தை எனப் போற்றப்படும் தந்தை எஸ்ஜேவி செல்வநாயகம் கூட மலேசியாவில் பிறந்தவர். இலங்கைக்கு இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்து கொண்டு படித்து ஆசிரியரானவர். பின்னர் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக வெளிவந்தவர். கொழும்பில் வாழ்ந்தாலும் கடைசிவரை ஒரு வாடை வீட்டில் வாழ்ந்தவர். அவர் தேர்தலில் நின்ற போது சிலுவைக்கா வேலுக்கா?என்ற முழக்கத்தை அவருக்கு எதிராக தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் சு. நடேசன் எழுப்பினார்.
ஆனால் அந்த மதவாதம் எடுபடவில்லை. தமிழர்களது அடையாளம் மொழி மதம் அல்ல. ஆனகாரணத்தினால்தான் தந்தை செல்வநாயகம் கடைசிவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழ்மக்களது சிறந்த தலைவராக இருந்து மறைந்தார்.
தேர்தலில் சுமந்திரனை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அனுப்புவது எங்களது மக்களுக்கு நல்லது.

ad

ad