29 ஜூலை, 2015

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்கிறார் : தேர்தல் ஆணையாளர் 
 தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 
 
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள், எதிர்வரும் புதிய நாடாளுமன்றின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என திட்ட வட்டமாக அறிவித்துள்ளார்.
 
 
தேர்தல் சட்டங்களுக்கு அமைய இம்முறை தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
 
மேலும் கடந்த காலங்களில் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாத மற்றும் நாடாளுமன்றத் தேர்தலி;ல் போட்டியிடாதவர்கள் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.