29 ஜூலை, 2015

ங்கச்சியை வயலுக்கு கூட்டிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தபின் நானே அவளை தனியாக விட்டு வந்தேன்!!கிளிநொச்சி சிறுமியின் அண்ணன் அதிரடி வாக்குமூலம்!!


கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி குஞ்சு பரந்தன் பகுதியில் வயலுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் ஒன்று விட்ட
சகோதரன் நேற்று நீதிமன்றில் அளித்த வாக்குமூலத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
3வயது நிரம்பிய பெண் குழந்தையொன்று ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமற்போயிருந்தது.இது பற்றி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிசார் பலரை துருவிதுருவி விசாரணை செய்திருந்தனர்.இதன்போது குறிப்பிட்ட 14வயதுடைய உறவு முறையான சிறுவனும் விசாரிக்கப்பட்டிருந்தான். எனினும் பின்னர் பொலிசார் அவனை விடுவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் சிறுமி ஒருத்தியின் அழுகிய உடல் ஒன்று குஞ்சுப்பரந்தனில் வயல் ஒன்றுக்கு நடுவில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.சிறுமியின் உடல் அடையாளம் காணமுடியாதவாறு சிதைந்திருந்தது.பின்னர் மருத்துவ ஆய்வுகள் முலம் காணமல் போன சிறுமியின் உடல்தான் அது என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பொலிசார் மீண்டும் சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.இதன்போது 14வயதுடைய சிறுமியின் அண்ணன் முறையான சிறுவன் தான் செய்த விளையாட்டுக்களை முழுவதும் கக்கி உள்ளான்.
அவன் மேலும் கூறுகையில்,ஆசை காரணமாக தங்கையை நானே வயல்வெளிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன்.அதன்பின்னர் அவளை நன்றாக வளர்ந்திருந்த நெற்பயிர்கள் நிறைந்த வயல் ஒன்றின் நடுவே தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டேன்.இவ்வாறு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற வழக்கின் போது நீதிபதியிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தான். 

இதன்பின்னர் அந்த சிறுவன் யாழ்ப்பாணத்திலுள்ள நன்னடத்தை இல்லத்திடம் ஒப்படைக்கப்பட்டான்.குறிப்பிட்ட சிறுமியின் தாயார் மனநலம் குன்றிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.