புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2013

Chennai Super Kings 164/3 (20/20 ov)
Pune Warriors 127/9 (20.0/20 ov)
Chennai Super Kings won by 37 runs

30 ஏப்., 2013

தற்போதைய செய்தி
மரக்காணத்தில் பாதிக்கபட்ட மக்களை சந்திக்க சென்ற  வை கோ விழுப்புரத்தில் வைத்து தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார் 

Chennai Super Kings 164/3 (20/20 ov)
Pune Warriors 50/4 (7.0/20 ov) நேரடி ஸ்கோர் 

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்ட ராமதாஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடுதல்(ஐ.பி.சி 143), காவல்துறையின் உத்தரவை உதாசீனப்படுத்துதல்(ஐபிசி 188), பொதுமக்களுக்கு இடையூறு செய்தல்(ஐ.பி.சி. 151) ஆகிய பிரிவுகளுடன் வன்முறையை

இலங்கை இனப்படுகொலையை நடத்திய மஹிந்த இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது
தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள்.

மேடையில் சவால் விட்டு பேசிய ராமதாஸ் மீது வழக்கு ஜெயலலிதா அறிவிப்ப

Tamil-Daily-News-Ramadas-Jaya

சென்னை: பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவின்போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டப் பேரவையில் நேற்று பல்வேறு கட்சியினர் பேசினர். இதற்கு பதிலளித்து
புனேவுக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணி 164 ரன்கள் சேர்ப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 42-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு புனேவில் தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி

அழகிகள் நடனம் பார்க்க வேலை பார்த்த
நகை கடையில் 360 பவுன் கொள்ளையடித்த ஊழியர்
 
சென்னை புரசைவாக்கத்தில் 'கேரளா ஜுவல்லர்ஸ்' என்ற பிரபல நகை கடை உள்ளது. இதன் உரிமையாளர் சிபிஜோசப். இவர் தனது கடையில் உள்ள நகை கையிருப்பு அவ்வப்போது ஆய்வு செய்வது உண்டு. இப்படி ஆய்வு செய்த போது 417 பவுன்

ராமதாஸ் கைது எதிரொலி : கிருஷ்ணகிரியில் பஸ் எரிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் அரசு பேருந்தை வழிமறித்து பயணிகளை இறக்கிவிட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் அரசு பேருந்து முழுமையாக எரிந்தது.   பேருந்துக்கு தீ வைத்தவர்களை பிடிக்க இன்ஸ் பெக்டர் சிவலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பாமக கொடிகள் சேதம்- சாலைமறியல் செய்தவர்களிடம்
டி.எஸ்.பி சமாதானம் ( படங்கள் )
 


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராம கூட்ரோட்டில் உள்ள பாமக கொடி கம்பத்தில் இருந்த கொடியில் அசிங்கம் ஏற்படுத்தியதாக கூறி காஞ்சிபுரம் சாலையில் அக்கிராம பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல் மும்முனி கிராமத்தில் பாமக கொடியை சேதப்படுத்தியதை கண்டித்து செய்யாறு பைபாஸ் சாலையிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் வந்தவாசி பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாமகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் வந்தவாசி சுற்றுவட்டாரப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் எஸ்பி முத்தரசி தலைமையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


நடிகர் வையாபுரி குடும்பத்தினருடன் ஜெயலலிதாவை சந்தித்தார் 
நடிகர் வையாபுரி தனது குடும்பத்தினருடன் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயல லிதாவை சந்தித்தார்.  அப்போது அவர்,  தனது மகன் வி.ஷ்ரவன் உபநயன நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்துமாறு அழைப்பிதழ் கொடுத்து கேட்டுக்கொண்டார்.


காடுவெட்டி சென்னையில் கைது
பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார்.  திருவல்லிக் கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது போலீஸ்.

மாமல்லபுரம் வன்னிய சித்திரை முழுநாள் இரவு விழாவில் அனுமதித்த நேரத்திற்கு மேலாக பேசியதன் புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ராமதாசுக்கு 15 நாள் சிறை : கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ்.  காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்ப்பட்டார்.  இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார். 
இதையடுத்து  ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங் கிக்கொண்டுள்ளனர்.


ராமதாஸ் கைது எதிரொலி : செஞ்சியில் 5 பேருந்துகள் உடைப்பு - சாலைமறியல்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்படுகிறார்.   காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாமகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  செஞ்சியில் 5 பேருந்துகளை அடித்து உடைத்துள்ளனர்.   மேலும் செஞ்சியில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 500க்கும் அதிகமான பாமகவினர் கைது 
திருப்பத்தூர், நாட்டராம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, அணைக்கட்டு, வேலூர், ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் போன்ற பகுதிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக் கப்பட்டுள்ளனர்.

ராமதாசை எந்த சிறைக்கு கொண்டு செல்வது? :
காவல்துறை திணறல்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ்.  காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டார்.  இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.  
இதையடுத்து  ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவரை எந்த சிறைக்கு கொன்டு செல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.  வட தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்காணோர் கைதாகி யுள்ளனர்.  இதனால் வடதமிழகத்தில் பதட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ராமதாசை எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் எந்த சிறைக்கு கொண்டு செல்வது என்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.


மதுரை சிறையில் ராமதாசை அடைக்க திட்டம் ?
காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்படுகிறார்.
வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக இருப்பதால் தென்மாவட்டத்தில் குறிப்பாக மதுரை சிறையில் அடைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிகிறது.  
தென்மாவட்டத்தில் அடைத்தால் பதட்டம் குறையும் என்று முடிவெடுத்து மதுரை சிறையில் அடைக்க விருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து கசிகிறது.
ராமதாஸ் கைதினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை பற்றிய மேலதிக செய்திகளுக்கு எம் இணைய தளத்தோடு இணைந்திருங்கள் 


ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு - விபரம்!
 

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் வைக்கப்படுகிறார்.  அவர் கைது செய்யப்பட்டதற்கான வழக்கு விபரம் :
143, 188,சி.எல்.ஏ.7(1) (a) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், காவல்துறை தடையை மீறுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் மூன்று நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளிவர வாய்ப்பு உள்ளது என குறிப்பிடுகின்றனர்.   நாளை மே -1 என்பதால் அரசு விடுமுறை.  அதனால் நாளை ஜாமீன் வாங்க முடியாது. நாளை மறுதினம் தான் பாமக வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தடைமீறு - பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு
கடந்த 25 ந்தேதி பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டம் நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது மரக்காணத்தில் பாமகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ad

ad