-

5 அக்., 2025

தனிப்பட்ட ரீதியாக சிறீதரன் ஜெனிவாவுக்கு :சி.வீ.கே.சிவஞானம்!

www.pungudutivuswiss.com


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் 

அறிக்கை எரித்தது தவறு என குறிப்பிட்டுள்ளார் இலங்கை தமிழ் 

அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், 

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கட்சி ரீதியாக நாங்கள் எமக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் ஏமாற்றம் ஏற்பட்டதையும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம்.

எங்களுடைய கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சிவஞானம் சிறீதரன் ஏற்கனவே ஜெனிவாவுக்கு போயிருக்கின்றார். அவர் தனிப்பட்ட ரீதியாக போயிருந்தாலும் எங்களுடைய கட்சியினுடைய உறுப்பினர்.

தனிப்பட்டதாகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்ந்த நிலைப்பாடாகவும் அவரை நான் பார்க்கின்றேன். அவர் கூடுதலாக பக்க நிகழ்வுகளில் பங்கேற்பார் என நம்புகிறேன்.

ஐநாவின் அறிக்கைகளை ஏமாற்றம் என்றே சொல்கிறோம். எதிர்ப்பதாக சொல்லவில்லை. எதிர்க்கின்றோம் என்று சொல்லிவிட்டு நாங்கள் எவ்வாறு அவர்களிடம் செல்ல முடியும். எரிக்கிறோம் என்று சொன்னால் நாங்கள் அவர்களிடம் சொல்ல முடியாது. 

ad

ad