தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவின் நடவடிக்கைக்கு
ஆதரவாக லண்டனில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை
600 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைகள் பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது.
அத்தோடு, நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மீது பதாகைகள் விரித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட பல தரப்பட்ட மக்களில் மதகுரு ஒருவரும், பார்வையற்ற நபர் மற்றும் அவரது மனைவி ஒருவரும் அடங்குவர்.
இதனையடுத்து, டிரஃபால்கர் சதுக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.