முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கார் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்திருந்த காரணத்தினால் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் குண்டு துளைக்காத கார் ஒன்று அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் தவிர்ந்த ஏனைய சலுகைகளை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அண்மையில் சட்டமூலம் ஒன்றின் மூலமாக இரத்துச் செய்திருந்தது.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத கார் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை(03) மேற்குறித்த குண்டு துளைக்காத கார் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் அறிவித்துள்ளது.