புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2014


தேர்தல் பணியில் சுணக்கம்: பூங்கோதை, அனிதா உள்பட 15 பேருக்கு தி.மு.க நோட்டீஸ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை, வீரபாண்டி ராஜா, கம்பம் செல்வேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேரிடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்ததாக 2 மாவட்டச் செயலாளர்கள் உள்பட 33 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைத்துள்ளது அக்கட்சித் தலைமை. ஒரு வாரத்திற்குள் இவர்கள் தலைமைக்கு விளக்கம் அனுப்பாத பட்சத்தில் கட்சியிலிருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என தி.மு.க எச்சரித்திருந்தது.

இந்நிலையில் கட்சியில் தனக்கு எதிர்ப்பான நிலை எடுத்தவர்களை தேர்தலை காரணம் காட்டி ஸ்டாலின் கட்டம் கட்டியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் கொந்தளித்தனர். கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் பலர் இருக்கும்போது இது ஒருதலைபட்சமான நடவடிக்கை என்றும் அவர்கள் ஆவேசம் காட்டினர். இந்தக் கொதிப்பை அடக்குவதற்காக சம்பிரதாயமாக தன் ஆதரவாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பும் தந்திரத்தை தி.மு.க தலைமை  கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, தி.மு.க தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன், திண்டுக்கல் முன்னாள் நகரச் செயலாளர் பஷீர் அகமது, ராஜபாளையம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன், வீரபாண்டி ராஜா, மாநில மாணவரணிச் செயலாளர் கடலூர் புகழேந்தி, ஏ.ஜி.சம்பத், வேலூர் முகமது சகி, திருவண்ணாமலை ஸ்ரீதரன், தென்சென்னை சதாசிவம், வட சென்னை ஆர்.டி.சேகர் ஆகிய 15 இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் ஸ்டாலினின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள தலைமை, ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

முந்தைய நோட்டீஸ் விவகாரத்தால் ஸ்டாலினுக்கு எதிராக எழுந்த சர்ச்சை இன்னமும் ஓயாத நிலையில்,  தி.மு.க.வின் இந்த அடுத்த கட்ட நடவடிக்கை ஸ்டாலினுக்கு வலு சேர்க்குமா அல்லது மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கவைக்குமா என்பது போகப்போகத்தெரியும்.

ad

ad