-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஜூன், 2014கேரளாவில் அமைச்சரை கண்டித்த தலைமை ஆசிரியை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றம்!
 

கேரளாவில் உள்ள காட்டன்ஹில் பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக ஊர்மிளா தேவி பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 16ம் தேதி, பள்ளியில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதில் கல்வி அமைச்சர் அப்து ராப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு அமைச்சர் வருவார் என்பதால், மாணவிகள், ஆசிரியைகள் காத்திருந்தனர். ஆனால், அமைச்சர் வரவில்லை. இதையடுத்து, மாணவிகளை வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு, தானும் ஒரு அலுவலக கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டார் தலைமை ஆசிரியை ஊர்மிளா தேவி.
இந்நிலையில், அமைச்சர் ராப், பகல் 12.30 மணிக்கு பள்ளிக்கு வந்தார். பள்ளியின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. யாரும் இல்லாததால், அமைச்சருடன் வந்தவர்களே கதவை திறந்தனர். பின்னர் விழா துவங்கியது. 
விழாவில் பேசிய தலைமை ஆசிரியை ஊர்மிளா தேவி, 'பள்ளி விழாக்களுக்கு வரும் பிரபலங்கள், நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால், மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்று, பாடம் படிப்பதில் பாதிப்பு ஏற்படும்,' என்றார். 
அடுத்த இரண்டு நாட்களில் ஊர்மிளா தேவிக்கு, தண்ணி இல்லாத காட்டுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வந்தது. இதையறிந்த எதிர்கட்சியினர் சட்டசபையில் குரல் எழுப்பினர். ஆனால், இந்த இட மாற்றம் வழக்கமானது தான் என, முதல்வர் உம்மன் சண்டி கூறியுள்ளார்.

விளம்பரம்