புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2014


தொடரும் பலி...கண்டுகொள்ளப்படாத ராக்கிங் கொடுமை!
ராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக  நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கும்போதும், எங்கள் நிர்வாகத்தில் ராக்கிங் இல்லை என்ற அறிவிப்பு  மட்டும் பகிரங்கமாக வெளியிடப்படும். ஆனால் பல கல்லூரிகளில் சப்தமில்லாமல் ராக்கிங் கொடுமைகள் அரங்கேறித்தான் வருகின்றன. பாதிக்கப்படுவர்கள் கல்லூரி நிர்வாகம், காவல்துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

கல்லூரிகளில் மட்டுமல்லாமல், பள்ளிகளிலும் கூட ராக்கிங் கொடுமைகள் அரங்கேறுகின்றன. ராக்கிங்கில் ஈடுபவர்களுக்கு பின்புலத்தில் அரசியல் அதிகாரம் இருப்பதால் எளிதில் நடவடிக்கை பாய்வதில்லை. மேலும், எதிர்காலத்தை கருதி பலர் புகார் கொடுப்பதில்லை. இது ராக்கிங்கில் ஈடுபடுவர்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. அவர்களின் அத்துமீறல்களும் எல்லை மீறுகின்றன. ஜாலி என்ற பெயரில் சீனியர்கள், ஜூனியர்களை படாதபாடு படுத்துகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவி யோகேஸ்வரி ராக்கிங் கொடுமையால் தற்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருடன் விடுதியில் தங்கியிருந்த சீனியர் மாணவி கோட்டீஸ்வரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட யோகேஸ்வரி, கல்லூரி நிர்வாகத்திடமும், பெற்றோரிடமும் தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து கூறியுள்ளார். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோன்று தமிழகம் முழுவதும் ராக்கிங் கொடுமைகள் அரங்கேறித் தான் வருகின்றன. ராக்கிங் கொடுமைக்கு பலியாகும் கடைசி உயிராக யோகேஸ்வரி மட்டும் இருக்கட்டும்.

சட்டத்திருத்தம்

கடந்த 1970 ஆம் ஆண்டில் தான் ராக்கிங் கொடுமைகள் உலகிற்கு தெரியவந்தது. இந்த கொடுமையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராக்கிங் வழக்கில் கைது செய்யப்படுவர்கள் பெரும்பாலும் தண்டனையிலிருந்து தப்பி விடுகின்றனர். மேலும், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்படுகின்றன-. எனவே, தண்டனையை அதிகரிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். 

ad

ad