புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2014




திர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி கவலைப்படாமல் வேறு எதைப்பற்றி நினைக்கப் போகிறார் தமிழக முதல்வர்? 

ஜெ. வழக்கறிஞர் குமார் மிக கவனமாக தனது வாதத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். ""ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்கிற சுப்ரமணியசாமியின் புகாரை விசாரிக்கச் சொல்லி.. ராமமூர்த்தி என்கிற நீதிபதி உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்டபடி விசாரணையை அன்றைய தி.மு.க. அரசு நடத்தவில்லை. நல்லம்மநாயுடு என்கிற சூப்பிரெண்ட் பதவி வகிக்காத அதிகாரியை வைத்து விசாரணை நடத்தினார்கள். அதற்கான சிறப்பு அனுமதியை அரசிடமிருந்து பெற வேண்டும். அப்படி எந்த அனுமதியையும் நல்லம்ம நாயுடு பெறவில்லை. அந்த விசாரணையின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கு தவறானது'' என்றார் அந்த சிறிய டேபிளைத் தட்டியபடி.

உடனே கோர்ட்டில் அமர்ந்திருந்த நவநீதகிருஷ்ணன், வழக்கு ஆவணங்களில் நல்லம்மநாயுடுவுக்கு அரசு விசாரணை செய்ய அனுமதியளித்த சாட்சி ஆவணங்களைத் தேடினார். சாட்சி ஆவணங்களில் எண் 2306, 2307 என அந்த அனுமதிக் கடிதம் பத்திரமாக இருந்தது. அதைக்கண்டு சற்றே திடுக்கிட்டுப்போனார் நவநீதகிருஷ்ணன்.

""2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகுதான் நல்லம்மநாயுடு சாட்சியம் அளித் தார். ஒரு விசாரணை அதிகாரி சாட்சியமளிக்க தேவை கேஸ் டைரி. அதைக்கூட நாம் நல்லம்ம நாயுடு வுக்கு தரவில்லை. அதுகூட இல்லாமல் வெறும் தனது ஞாபக சக்தியை வைத்து சாட்சியமளித்த நல்லம்ம நாயுடு விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கிய ஆணை யை நாம் காணாமல் போகச் செய்திருந்தோம். அந்த ஆவணம் எப்படி வழக்கு ஆவணங்களில் வந்தது'' என கோர்ட்டுக்கு வெளியே லஞ்ச ஒழிப்பு எஸ்.ஐ.யிடம் நவநீதகிருஷ்ணன் குசுகுசுவென கேட்டார்.

அதன் இன்னொரு ஒரி ஜினலை நல்லம்மநாயுடு தன் கையில் பத்திரமாக வைத்திருந்தார். அதை மறக்காமல் அப்போதே கோர்ட்டில் தந்தார் என எஸ்.ஐ. தந்த பதிலைக் கேட்டு தலையில் கை வைத்துக்கொண்டார் நவநீதகிருஷ்ணன்.

நீதிபதி மைக்கேல் டிகுன்ஹாவும் தன் பங்குக்கு "அரசு அனுமதி பெறாதது எவ்வளவு சீரியஸான விஷயம். இதை ஏன் முன்பே நீங்கள் கூறவில்லை' எனக் கேட்க... 

நீதிபதி ராமமூர்த்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அப்பொழுது உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகா சரண் தலைமையில் இந்தப் புகாரை விசாரித்தனர். "சுமார் 300 பேரிடம் விசாரணை நடத்தினோம். ஜெ. மீதான புகாரில் வழக்குப் பதிவு செய்ய தேவையான அடிப்படை காரணங்களை கண்டுபிடித் திருக்கின்றோம்' என லத்திகா சரண் கோர்ட்டில் தெரிவித்தார். அதன்பிறகு லத்திகாசரணும் லஞ்ச ஒழிப்புத்துறை உயரதிகாரியுமான வி.சி.பெருமாளும், கூடுதல் சூப்பிரெண்ட்டண்ட்டாக இருந்த நல்லம்மநாயுடுவிடம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைத்தனர். அவர், லத்திகாசரண் தலைமையிலான போலீஸ் டீம் விசாரித்த 300 பேரிடமும் மற்றும் பலரிடமும் விசாரித்து ஜெ.வுக்கு  எதிராக வழக்கைப் பதிவு செய்தார்.

ஊழல் தடுப்புச் சட்டம் 17, 18-ன்படி சூப்பிரெண்ட்டண்ட் அந்தஸ்திற்கு குறைவான அதிகாரி இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது, அப்படி குறைவான பதவி உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டுமென்றால் அதற்கு அரசிடம் சிறப்பு அனுமதி பெறவேண்டும். ஆக... ஒரு  தகுதியில்லாத நபர் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பாடாக இந்த வழக்கை விசாரித்திருக்கிறார் என நாங்கள் அப்பொழுதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சிவப்பாவிடம் தெரிவித் திருக்கிறோம். இப்படி தகுதியில்லாத நபர் விசரித்த வழக்கு செல்லாது என வரிசையாக 36 தீர்ப்புகளைச் சொன்னார் பி.குமார்.

திங்கட்கிழமை ஜெ. சார்பில் தனது வாதத்தை துவக்கிய குமார், எடுத்த எடுப்பிலேயே ""96-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசியல் ரீதியாக ஜெயலலிதாவை பழி வாங்குவதற்காக போட்ட வழக்கு இது. இந்த வழக்கில் சொல்லப்பட்ட சாட்சியங்களும், தொகுக்கப்பட்ட ஆவணங்களும் ஜெ.வை அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்கிற தீய நோக்கத்தோடு திரட்டப்பட்டவை. அதற்கு உதாரணமாக பல சம்பவங்களைச் சொல்ல முடியும். இந்த வழக்கிற்காக ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் அவர் சிறையிலிருந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு, அவரது புகழைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டது. 

அத்துடன் அந்த ரெய் டின்போது கைப்பற்றப்பட்ட சேலைகள், செருப்புகள், நகைகள் ஆகியவற்றை தி.மு.க. தலைவரும் அன்றைய முதல் வருமான கலைஞரின் உறவினர் நடத்திய சன் டி.வி.யில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பினார்கள். ஜெ. வீட்டில் நடந்த ரெய்டின் போது போலீஸ் எடுத்த புகைப் படம் அரசின் உதவியின்றி எப்படி சன் டி.வி.க்கு போனது? தி.மு.க.வின் அரசியல் எதிரியான ஜெ. வின் புகழுக்கு களங்கம் விளைவிக்க தி.மு.க. அரசின் போலீஸ் துணை போனது. எனவே தீய நோக்கத்துடன் புலனாய்வு நடத்தி, புனையப் பட்ட இந்தப் பொய் வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண் டும்'' என்றார்.

ஜெ. வழக்கறிஞர் பி.குமார் முன்வைக்கும் வாதத் தில் உள்ள ஒவ்வொரு முக்கியமான விஷயங்களையும் குறிப்பெடுத்துக்கொள் ளும் நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா, அதைப்பற்றிய தனது கருத்துகளை இரவு 8 மணி வரை நீதிமன்றத்தில் அமர்ந்து தனது லேப்டாப்பில் ரகசியமாக பதிவு செய்து கொள்கிறாராம். 

ad

ad