புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2014


010e
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாக சபையினரின்” ஓர் கலந்துரையாடல்…
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையினரின் ஓர் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2014) 15:30 மணியளவில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

முதலில் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயலாளர் திரு. தர்மலிங்கம் தங்கராஜா அவர்கள் தனது கருத்துரையில்,
ஒன்றியத்தின் செயற்பாடுகள், இனி நடக்க இருக்கும் செயற்பாடுகள் மற்றும் புங்குடுதீவின் இன்றைய நிலைபற்றி எடுத்துக் கூறியதோடு மட்டுமல்லாமல், மாநில ரீதியாக மக்களை உறுப்பினர்களாக இணைத்து நிறைய மக்களை உள்வாங்கிச் செயற்பட வேண்டும் என்றும், இறுதியாக “தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு; தானுண்டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறியவீணன். கன்னலடா என் சிற்றூர் என்போனுள்ளம் கடுகுக்கு நேர் மூத்தது வரையுள்ளம்” எனும் பாவேந்தர் கவிதை வரிகளைக் கூறி, கடுகென்னது வரையென்ன அதையெல்லாம் தாண்டிய பேருள்ளம் படைத்தவர் புங்குடுதீவு மக்கள் எனக் கூறி தனது உரையினை நிறைத்தார்.
010bதலைவர் திரு. இராசமாணிக்கம் இரவீந்திரன் அவர்கள், ஓல்டேன் வாழ் புங்குடுதீவு மக்களின் நிறைந்த வரவு கண்டு மகிழ்வுற்றார். “புங்குடுதீவு மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அதன் பயன் மிகப் பெரிதென்றார். யுத்த சூழலற்ற இக்காலத்தில் எல்லா காரியங்களையும் இலகுவாகச் செய்யமுடியும்” என்றார். “மக்கள் தங்கள் அபிப்பிராயங்களை முன்வையுங்கள், ஓல்டேன் மாநிலத்தில் புங்குடுதீவு ஒன்றியத்துக்கான செயற்குழு ஒன்றை நிறுவுங்கள், ஊருக்கும் உறவுக்கும் பக்கபலமாய் இருந்து பணியாற்றுவோம்” என்றார்.
பொருளாளர் திரு. சத்தியநாதன் இரமணதாஸ் அவர்கள் தமது கருத்தாக, “திரைகடலோடியும் திரவியம் தேடு எனும் முதுமொழிக்கேற்ப தேடிய திரவியத்தில், ஊருக்கும் சிறிதளவேனும் உதவிட வேண்டும் என்றும் எல்லோரும் இணைந்தால் தான் இந்த வண்டி ஓடும்” என்றும் உணர்த்தினார்.
“ஓன்றியத்தின் வரவுசெலவு அறிக்கையை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை எமது இணையமாகிய www.swisspungudutivu.com இல் பார்வையிடலாம் என்றும், அங்கத்தவர் பணம், ஊருக்குத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டோம்” என்றும் தெரிவித்தார். “ஊர் கூடித் தேர் இழுப்போம் ஒன்றுபட்டு வாருங்கள்” என்றார்.
010cஉபதலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் தமதுரையில், ஓல்டேன் மாநிலத்தில் நேரடியாகச் சென்று எமது மக்களுக்கு அழைப்பு விட்டதின் பயனைக் கண்டு மகிழ்ந்தார். “நேர் கோட்டில் பயணிப்போம் என்ற செயலாளரின் கூற்றுக்கு, நாம் செய்யும் செயல்களைப் பொறுத்துத் தான் அது அமையும்” என்றார்.
“புதிய நிர்வாகம் முதலில் ஆற்றிய செயல் எமது ஊரின் ஆதரவற்ற ஒரு மனிதனுக்கான இறுதிப் பயண நிகழ்வாகும்” என்றார். “நிழற்குடை (பஸ் தரிப்பிடம்) அமைத்தல், மலசல கூடங்கள் முக்கிய சந்திகளில் அமைத்தல், அதனைப் பராமரித்தல் போன்ற செயல் திட்டங்களை மக்களின் பங்களிப்போடு செய்ய உள்ளோம், அதற்கு எல்லோரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்” என்றார். பலரின் கேள்விகளுக்கு காத்திரமான பதிலிறுத்தார்.
ஆலோசனைச்சபை உறுப்பினர்களில் ஒருவரான திரு.செல்வரெத்தினம் சுரேஸ் அவர்கள் தமதுரையில், “ஆரோக்கியமான பணி செய்ய வேண்டும். அதுவும் மக்களை உள்வாங்கிச் செய்ய வேண்டும். புங்குடுதீவு வைத்தியசாலையின் முற்றுமுழுதான புனரமைப்பு, 90 காலப்பகுதியில் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின், இயங்கிக் கொண்டிருந்த ஐந்து பாடசாலைகளுக்கு இயன்றவு நிதியுதவி, சர்வோதயம் சாட்டியில் பாதை அமைப்பிற்கான நிதியுதவி, நூல் வெளியிடுகள், அஞ்சலி நிகழ்வுகளென பல பணிகளை ஒன்றியம் செய்தது பற்றிக் கூறியிருந்தார். எல்லோரும் இணைந்து கைகொடுத்தால் பெரிய வேலைகளை எளிதாகச் செய்துவிட முடியும்” என்றார்.
010dஓல்ரன் வாழ் எம் உறவுளின் கருத்துரைகளாக,…
“சேர்க்கும் பணம் ஊருக்குப் பயன்பட வேண்டும். அது உடனுக்குடன் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும். நாச்சிமார் கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் மக்களிடம் பணம் சேர்த்துக் கட்டிக் கொடுத்தது பற்றிக் கூறினார். கணேச மகா வித்தியாலய நூற்றாண்டு விழா புத்தக வெளியீடு செய்யக் கேட்டிருந்தேன், ஒன்றியம் செய்யவில்லையென” ஆதங்கப்பட்டார் கமல் அவர்கள். மற்றும் முதியோர் இல்லம் இயங்குவதாகவும் அதற்கும் உதவுவதாகக் கூறினார்.
ஜெயா அவர்கள் கருத்தாக “நிழற்குடை, மலசலகூடம் அமைப்பதில் பிரயோசனம் இல்லை. பராமரிக்க ஆள் இல்லாவிட்டால் எல்லாமே வீணாகிவிடும், ஆகவே அதையும் கவனத்தில் கொண்டு அத்திட்டத்தை செய்ய வேண்டும்” என்றார்.
வினாயகமூர்த்தி அவர்கள் “நம் ஊரின் முன்னேற்றத்திற்காக எப்போதும் உதவத் தயாராக உள்ளோம். அங்கு மட்டுமல்ல இங்கும் மக்கள் ஒற்றுமையாக இயங்க வேண்டும்” என்றார்.
திருமதி வினாயகமூர்த்தி அவர்கள் “சில நடவடிக்கைகளில் தமது ஆதங்கங்களை குறிப்பிட்டதுடன், ஒன்றியத்தின் செயற்பாடுகள் ஆரோக்கியமான செயற்பாடாக அமைய” வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
திருமதி. சுந்தரேஸ்வர சர்மா குருக்கள் அம்மா அவர்கள் கலந்து சிறப்பித்து ஆசிகளும் வழங்கினார். “ஊருக்கான நல்ல விசயங்கள் செய்வதைக் கண்டு தான் மகிழ்வதாகக்” கூறினார்.
மோகன் அவர்கள் “ஒன்றியத்தின் செயற்பாடுகளைக் கேட்கச் சந்தோசம். எல்லோரும் சேர்ந்து செய்வோம்” என்றார்.
சிவலிங்கம், நகுலன், விக்னேஸ்வரன், குமார் (ராசன்) போன்ற பலரும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் தற்போதைய செயற்பாடுகளை வரவேற்று மகிழ்ந்தனர். இணைந்து செய்வோம்” என்றனர்.
**இறுதியாக ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற ஒல்ரன் மாநில செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் திரு. சிவலிங்கம் அவர்களுடன் சேர்ந்து திரு. கமல் அவர்கள், திரு. நகுலன் அவர்கள், திரு. குமார் (ராசன்) அவர்கள், திரு. விக்னேஸ்வரன் அவர்கள் ஆகியோர் ஒல்ரன் மாநில செயற்பாட்டுக் குழுவினராவார்கள்.
இக்குழுவினருக்கு ஒன்றியம் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது.
010fநேற்றைய ஓல்டேன் மாநில கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை பேரும் ஒன்றியத்தின் உறுப்பினர்களாகத் தம்மை இணைத்துக் கொண்டது மட்டுமல்ல நால்வர் சந்தாப் பணத்தினையும் உடனேயே தந்து உதவியுள்ளனர்.
ஓல்டேன் மற்றும் ஒல்டேனுக்கு அண்மையில் வசித்தும், இக்கூட்டத்தில் “தவிர்க்க முடியாத காரணங்களினால்” கலந்து கொள்ளாத ஏனையோரிடம் ஓல்டேன் மாநில செயற்பாட்டுக் குழுவினர் சென்று, அவர்களையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வோம் என உறுதியளித்தனர்.
நிகழ்வுக்கான மண்டபச் செலவும், தேநீர், குளிர்பானம் போன்றவற்றிற்கான செலவினையும் திரு.வினாயகமூர்த்தி அவர்கள் ஏற்றுக் கொண்டார். சிற்றுண்டிக்கான செலவினை திரு.சிவலிங்கம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
இவர்களுக்கு ஒன்றியம் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கின்றது.
இவ்வண்ணம்,
புங்குடுதீவுமக்கள் விழிப்புணர்வுஒன்றியச் செயலாளர்,
தர்மலிங்கம் தங்கராஜா. (பீல் மதி)
தகவல்….
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்)
உபதலைவர் & ஊடகப் பொறுப்பாளர்
-சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்

ad

ad