புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2014

அவங்க எங்களைப் பார்க்கிறாங்க, நாங்க அவங்களைப் பார்க்கிறோம்!
ற்போது  தி.மு.க-வில் நிகழ்ந்துவரும் பல்வேறு குழப்பங்களுக்கிடையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நகைச்சுவை தொனிக்கப் பேசிவருபவர் துரைமுருகன். சமீபத்தில் மதுரையில் கலைஞர் பிறந்த நாள்
பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரின் பேச்சிலும் சில ஜாலியான விஷயங்கள் தலைகாட்டின.
  ''நான் 50 வருஷமா கலைஞரைப் பார்த்துட்டு வர்றேன். தலைவருக்கு எப்போது போரடித்தாலும் துரையை வரச் சொல்லுப்பானு சொல்லிடுவார். ஒருமுறை தலைவர் ஜெயில்ல இருந்தார். பார்க்கப்போன என்கிட்டே 'போரடிக்குது,  நீயும் உள்ளே வாயா’னு சொல்லி ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்க்கச் சொன்னார். நானும் போய் பார்த்தேன். அவர் உடனே என்னை கோர்ட்ல போய் நிற்கவெச்சுட்டார். அந்த நீதிபதி ஒருவகையில் எனக்கு வேண்டப்பட்டவர். 'ஏம்பா, படிச்சவனான நீ ஏன் அண்ணா சிலை முன்னாடி நின்னுகிட்டு கல் எறிஞ்சிட்டிருந்தே’னு கேட்டார். வேற ஏதாவது கேஸ் போட்டு உள்ளே அனுப்புவாங்கனு பார்த்தா, இப்படி ஒரு நியூசென்ஸ் கேஸ் போட்டுருந்தாங்க. எனக்கு சங்கடமாப் போச்சு. ஆனா நீதிபதி, இனி இப்படி பண்ணக் கூடாதுனு வார்ன் பண்ணிட்டு என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டார். அப்புறம் எப்படியோ வேற கேஸுல தலைவரைப் பார்க்க ஜெயிலுக்குப் போயிட்டேன். அந்த அளவுக்கு தலைவர் மீது எனக்கு பற்று.
கலைஞர் எங்கே போனாலும் எப்பவும் என்னை அவர் கூடவே வரச் சொல்வார். அவரைப்போல யாராலும் ஜோக் அடிக்க முடியாது.  தெரிந்தவர் ஒருவர் தன் திருமணத்தை செவ்வாய்க்கிழமையில் நடத்தினார். இருந்தாலும் அவர் உறவினர்கள் 'செவ்வாய்க்கிழமை ராசியில்லாத நாள். இந்த நாளில் கல்யாணம் பண்ணலாமா’ என்று அவரை நோகடித்திருக்கிறார்கள். அங்கு வாழ்த்தப்போன கலைஞர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு 'இருக்கிற நாட்களிலேயே வாயுள்ள நாள் செவ்வாய்தான். மற்ற நாட்களெல்லாம் ஊமை நாட்கள்தான்’ என்று நண்பர் மகிழ்ச்சியடையும் வகையில் பேசினார்.
ஒருமுறை சட்டசபையில் நாப்தாலினில் இருந்து என்னென்ன தயாரிக்கலாம் என்று பல பொருட்களைப் பட்டியலிட்டார் கலைஞர். மொத்தம் 99 பொருட்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு அமர்ந்தார். இதைக் கவனிக்காமல் துங்கிக்கொண்டிருந்த எங்க கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் திடீரென்று எழுந்து நாப்தாலினில் வேறு என்ன தயாரிக்கலாம் என்று கேட்க, கலைஞரோ 'காது கேட்கும் மெஷினும் தயாரிக்கலாம்’ என்று சொல்லி அவரை அமரவைத்தார். சபையே சிரித்தது.
இந்தத் தேர்தல்ல எப்படித் தோற்றோம்னு எங்களுக்கும் தெரியலை. 'சரியாத்தானே ஓட்டு போட்டோம் அப்புறம் எப்படி இவங்க  தோற்றாங்க’னு மக்களுக்கும் புரியலை. நாங்க மக்களைப் பார்க்கிறோம். அவங்க எங்களைப் பார்க்கிறாங்க. எப்படி இவ்வளவு பெரிய வெற்றினு அ.தி.மு.க-காரனும் எங்களைப் பார்க்கிறான்.
ஜனாதிபதி, பிரதமரே காத்துக்கிடந்து பார்க்கிற சாய்பாபாவே, நம்ம கலைஞரைப் பார்க்க வீடு தேடி வந்தார். அப்படீன்னா கலைஞர் அவரைவிட பெரிய பாபாதானே?'' என்றார்.

ad

ad