புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2014


ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு 2011ம் ஆண்டு தொடக்கம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் அமெரிக்காவுக்கான வீசா வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 2013ம் ஆண்டில் சமய நடவடிக்கைகளுக்காக தேரர் பல பலமுறை அமெரிக்காவுக்கு சென்று வந்ததாக டிலன்த விதானகே குறிப்பிட்டார்.
எனினும் இவரது வீசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad