புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2014


மதிமுக ஆய்வுக் களம்’ -புறப்படுகிறார் வைகோ 
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
தே.மு.தி.க. 14 தொகுதிகளிலும், ம.தி.மு.க. 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் 2 கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேச உள்ளார். ‘ம.தி.மு.க. ஆய்வுக் களம்’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி மூலம் ஜூலை 3-ந் தேதி முதல் வைகோ தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளார். 
அன்றைய தினம் காலை நெல்லை புறநகர் பகுதி கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அவர் சந்திக்கிறார். அன்று மாலை நெல்லை மாநகர் நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார். அதன்பின்னர், ஜூலை 5-ந் தேதி விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளையும், 8-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகளையும், 13-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளையும், 15-ந் தேதி கோவை மாநகர்-புறநகர் மாவட்ட நிர்வாகிகளையும், 17-ந் தேதி கரூர் மாவட்ட நிர்வாகிகளையும், 18-ந் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளையும் வைகோ சந்தித்து பேச உள்ளார். 
இந்த கூட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள உள்ளனர். கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், செய்ய வேண்டிய சீரமைப்பு குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் வைகோ ஆலோசனை கேட்க உள்ளார்.

ad

ad