27 ஜூன், 2014


33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய அரசு டிரைவருக்கு தபால் தலை
திண்டுக்கல் கிழக்குமாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது58). திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 1981–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30–ந்தேதி
ஓய்வு பெறுகிறார். 33 ஆண்டுகளாக இவர் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் அவரை கவுரவிக்கும் வகையில் சமூகநலத்துறை ஊழியர்கள் அவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த தபால் தலையை அவர் ஓய்வுபெறும் 30ந் தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டு கவுரவப்படுத்துகிறார்.