புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2014

பாகிஸ்தானுக்கெதிராக போர்: ஆறு தொடரில் களமிறங்கும் இந்தியா 
 இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 6 போட்டி தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒப்பந்தமாகியுள்ளது.
 
இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையேயான கடைசி
 கிரிக்கெட் போட்டிகள் 2012 டிசம்பர் - 2013 ஜனவரி வரை இந்தியாவில் நடைபெற்றது.
 
அதன் பின்னர் இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை மேம்படுத்த பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது.
 
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் இந்தியாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் ஆதரவாக வாக்களித்தது.
 
இந்தியாவுடன் மீண்டும் கிரிக்கெட் உறவு என்ற நிபந்தனையின் பேரில் தான் பாகிஸ்தான் இந்த ஆதரவை அளித்தது.
 இதைத் தொடர்ந்து போட்டி தொடருக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில்
 நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் அடுத்த 
8 ஆண்டுகளுக்கான போட்டிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad