புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2014


சுவிஸில்  வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் புளொட் தலைவர் சித்தார்த்தன் 

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 

மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி மீனா சித்தார்த்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

25ஆவது வீரமக்கள்தின நிகழ்வுகளாக பிற்பகல் 02.00 (14.00) மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து..

**விநோதஉடைப் போட்டி

**பொது அறிவுப் போட்டி 

**பாட்டுக்கு அபிநய ஆட்டம் 

**நடன நாட்டிய நிகழ்வுகள் 

**இன்னிசை நிகழ்வுகள்

**பரிசளிப்பு நிகழ்வு 

**தலைமை உரை

**பிரதம விருந்தினர்கள் உரை

**நன்றி நவிலல்

(*** 06.07.2014 அன்றையதினம் காலை 8.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன், பிற்பகல் நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.)

***தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.***

தொடர்புகளுக்கு...
076.5838410
079.6249004
079.8461170
079.8224153
077.9485214

           --தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை—


குறிப்பு:-
ஏனைய அனைத்து நாடுகளிலுமுள்ள புளொட் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை மேற்படி 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வினில் கலந்து சிறப்பிக்குமாறு புளொட்டின் சுவிஸ் கிளை அன்போடு வரவேற்பதுடன், வீரமக்கள் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக சுவிஸூக்கு வருகைதர விரும்புவோர் மேற்குறித்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றது.

           --தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை—

ad

ad