புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2014


ஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்-பி பி சி 
இலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் என்ற அமைப்பினால் அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையின் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், வன்செயலுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா விசாரணைக்குழு விசாரணை நடத்தும் பொழுது, இலங்கையில் அண்மையில் சிங்கள கடும்போக்குவாத பொதுபல சேனா அமைப்பினரால் அளுத்கம மற்றும் பேருவளை நகரங்களில் நடத்தப்பட்ட வன்செயல்கள் குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

ad

ad