புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2014


ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார் எழுத்தாளர் ஞானி!
ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் ஞானி, அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். கட்சியின் உடல் நிலையும், தனது உடல் நிலையும் சரியில்லாததாலேயே தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  


அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, பல்வேறு மாநிலங்களிலும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என  பல்வேறு பிரமுகர்களை ஆம் ஆத்மி கட்சி தங்களது பக்கம் ஈர்த்து இணையவைத்தது. சிலர் தாமாகவே முன்வந்து சேர்ந்தனர்.
அந்த வகையில் தமிழகத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட பிரமுகரான உதயகுமார், ஞானி போன்றவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.

இதில் உதயகுமார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, ஞானி நாடாளுமன்ற தேர்தலோடு இணைந்து நடைபெற்ற ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஞானி 5,729 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஞானி திடீரென விலகியுள்ளார். "எனது உடல்நிலையும், கட்சியின் உடல் நிலையும் சரியில்லை. தொடர்ந்து கட்சியில் செயல்பட முடியாத காரணத்தால் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்.

கட்சியில் இருந்து விலகினாலும், நான் கட்சியில் சேரும் முன்னரே ஆம் ஆத்மியை பற்றி ஆதரித்து பேசியும், எழுதியும் வந்தேன். இனியும் தொடர்ந்து ஆதரிப்பேன்" என்று தமது வலைதளத்தில் எழுதியுள்ளார்.

ad

ad