மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மேலும், 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இதையடுத்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஒத்திகையின் போது, கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளைப் போன்று பல்வேறு வேடங்களில் ஊர்களுக்குள் ஊடுருவி வருவார்கள். அவர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் மடக்கி பிடிக்க வேண்டும். இதற்கு முன்பு நடைபெற்ற ஒத்திகைகளின் போது கோட்டை விட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு 48 மணி நேர ஆபரேஷன் ஆம்லா ஒத்திகை தொடங்கியது. சென்னை உள்ளிட்ட 14 கடலோர மாவட்டங்களிலும் இந்த பாதுகாப்பு ஒத்திகை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் ஆம்லா நாளை மறுதினம் காலை 6 மணி வரை நடக்கும்.