புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2014



சென்னையில் 12  மாடி புதிய கட்டிடம் இடிந்து தரைமட்டம் - மீட்பு பணி தீவிரம்
 

சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 12 மாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு, முழுமை பெறாத நிலையில் இருந்தது.  இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.  



இந்நிலையில் இன்று மாலை மழை பெய்ததையடுத்து, 12 கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.  பூமிக்கு அடியிலும் கட்டிடம் கட்டப்பட்டிருந்ததால், சரிந்த கட்டிடம் பூமீக்குள் புதைந்துவிட்டது.  இந்த கட்டிட இடிபாட்டில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.  அத்தனை பேரும் வெளிமாநில தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு வந்துவிட்டதால், மீட்புபணியில் தாமதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ராட்சத மின் விளக்குகள் தயார் நிலையில் உள்ளன.   அவசர ஊர்திகளும் தயார் நிலையில் உள்ளன. 
சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 80 பேர் விரைந்தனர். 

ad

ad