புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2019

ஜனநாயக போராளிகள் கட்சியை வளைத்துப் போட்டார் ஆறுமுகன் தொண்டமான்!

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணத்தில் செயற்படும் மூன்று கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும், இ.தொ.கா சார்பாக பொது செயலாளர் அனுஷா சிவராஜா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோர்

ad

ad