-

13 அக்., 2025

www.pungudutivuswiss.comp
 புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் மகாசபை கூட்ட செய்தி அலசல் 
கடந்த 12 ஆம்  திகதி நடைபெற்ற ஆலய மகாசபை கூடடம்   பிரதேச சபை செயலாளரின் மேல் பார்வையில் தான்  நிகழ்வுற்றது .வரவு செலவு அறிக்கை சரி பார்க்கப்படட போது சபையோரின் கெலவுகளும் விமர்சனங்களும் பிரதேச சபை செயலாளரின் கவனத்தை ஈர்த்த போது  வரவு செலவு அறிக்கை  உண்மையானதாக   விவரமானதாக காணப்படவில்லை என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது . இதனால்  45 நாட்களில் மீண்டும் வரவு செலவு அறிக்கை  திருத்தி சமர்ப்பிக்கடவேண்டும் அதன் பின்னர் மீண்டும்  தம்மால்  அறிவிக்கட்டும் திகதியில் கூடடம் நடைபெறும்  என சொல்லப்பட்ட்து .இந்த நடைமுறை செயல்படுத்தப்படாத பட்ஷத்தில் பிரதேச சபை தலையிடும் அடுத்து வரும் நிர்வாகங்களில்  இந்த நிர்வாகத்தினர் தெரிவாக முடியாதபடி  இருக்கும் 
www.pungudutivuswiss.comவிஜய் கூட்டணிக்கு வேண்டாம்.. கரூர் விவகாரத்தை சமாளிக்க முடியாமல் ஓடட்டும்.. அப்ப தான் தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக

கோட்டாபயவுக்கு சொந்தமான வீடு அரசினால் பறிமுதல்

www.pungudutivuswiss.com

பாப் பாடகி கேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ; சமூக ஊடகங்களில் வைரல்

www.pungudutivuswiss.com

பாப் பாடகி கேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ; சமூக ஊடகங்களில் வைரல் | Ex Pm Justin Trudeau Pop Singer Katy Viral Pics

   கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரை நிர்வாண கோலத்தில் பிரபல பாப் பாடகியான கேத்தி பெர்ரியுடன் நெருக்கமாக

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை' - உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

www.pungudutivuswiss.com

'யாருமே யூகிக்க முடியாத கூட்டணி ஒன்று உருவாகும்' - டி.டி.வி தினகரன்! [Monday 2025-10-13 07:00]

www.pungudutivuswiss.com

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''நான் சொல்வதை நிறையப் பேர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஏற்கனவே நான்கு கூட்டணிகள் அமைய வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். திமுக தலைமையில் ஒரு கூட்டணி, என்.டி.ஏ கூட்டணி, விஜய் தலைமையில் கூட்டணி, நாம் தமிழர் சீமான் அவர் எப்பொழுதும் தனியாகத்தான் போட்டியிடுவார். இந்த முறையும் தனியாகத்தான் போட்டியிடுவேன் என அறிவித்து விட்டார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''நான் சொல்வதை நிறையப் பேர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஏற்கனவே நான்கு கூட்டணிகள் அமைய வாய்ப்பு

மோசடி விவகாரம்: மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை

www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளார்.

பாலஸ்தீனியக் கைதிகள் 1,966 பேரும் விடுவிக்கப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்!

www.pungudutivuswiss.com

விடுதலையான பாலஸ்தீனியக் கைதிகளை பொறுப்பெடுக்கும் செஞ்சிலுவைச் சங்கம்


ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக திங்கட்கிழமை விடுவிக்கப்படவிருந்த 1,966 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் பேருந்துகளில் ஏறிச் சென்றதாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இவர்களில், காசாவைச் சேர்ந்த 1,716 பேர் காசாவின் நாசர் மருத்துவமனையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இரண்டாவது குழுவில் 13 பணயக் கைதிகளையம் விடுவித்தது ஹமாஸ்

www.pungudutivuswiss.com


உயிருள்ள 13 பணயக்கைதிகள் கொண்ட இரண்டாவது குழு இஸ்ரேலை அடைந்துள்ளது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

இடமாற்றத்தில் முறைகேடு - வடக்கில் ஆசிரியர்கள் போராட்டம்! [Monday 2025-10-13 16:00]

www.pungudutivuswiss.com


ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு, தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் தற்போது உள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காகவும் அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நன்கிழுக்காகவும் செயல்பட்டு கொண்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு, தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் தற்போது உள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காகவும் அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நன்கிழுக்காகவும் செயல்பட்டு கொண்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்! [Monday 2025-10-13 16:00]

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி இன்று (13) காலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி இன்று (13) காலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் விரைவில் கைது! [Monday 2025-10-13 16:00]

www.pungudutivuswiss.com


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கைது வரும் நாட்களில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இந்த அரசியல்வாதி கைது செய்யப்படுவார் என்பது அறியப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கைது வரும் நாட்களில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இந்த அரசியல்வாதி கைது செய்யப்படுவார் என்பது அறியப்படுகிறது

வடக்குக்கு முதலமைச்சர் வேட்பாளரை தேடும் அமைச்சர்கள்

www.pungudutivuswiss.com



மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன.

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சியின் முன்னாள் எம். பி.க்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாணசபை முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர் . இதுபற்றிக் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. 

கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பி.க்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பி.க்கள் போட்டியிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது

ad

ad