![]() தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது |
-
14 அக்., 2025
16 நாட்களுக்கு பின்னர் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்! [Tuesday 2025-10-14 16:00]
நாளை முதல் வெளிநாட்டவர்கள் மின்னணு பயண அங்கீகாரம் பெறுவது முக்கியம்! [Tuesday 2025-10-14 16:00]
![]() இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த அனுமதியைப் பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும். |
நேபாளத்தில் சிக்கினார் செவ்வந்தி!- யாழ். தம்பதியும் கைது! [Tuesday 2025-10-14 16:00]
![]() ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் |
நாளை முதல் இலங்கையில் அறிமுகமாகும் ETA புதிய விதிமுறை
இலங்கை அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறைப்படி, 2025 அக்டோபர் 15ஆம் திகதி முதல் நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தங்கள் பயணத்திற்கு முன் இலத்திரனியல் பயண அனுமதி “Electronic Travel Authorisation (ETA)” அனுமதி பெறுவது கட்டாயம்.
இது நாட்டின் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும், நுழைவு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் வகை செய்யப்படுவதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது, முன்கூட்டியே ETA விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் மூலம் விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவு புள்ளிகளில் நேரம் வீணாகாமல், பயணிகளுக்கான நுழைவு சீராக நடைபெறும்.
பயணிகளும் வணிக நோக்கில் வருபவர்களும் தங்கள் ETA விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் www.eta.gov.lk மூலம் விமானத்தில் ஏறும் முன்பே சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தியா வெளிநாட்டு குடிமக்களுக்காக 2025 அக்டோபர் 1ஆம் திகதி முதல் “Digital Arrival Card” என்ற புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறைப்படி, வெளிநாட்டு பயணிகள் தங்களின் வருகை விவரங்களை (Disembarkation Card) வருகைக்கு முன் 72 மணிநேரத்திற்குள் ஆன்லைனில் பூர்த்தி செய்யவோ அல்லது நாட்டிற்கு வந்த பிறகு கையால் நிரப்பவோ முடியும்.
டிஜிட்டல் விண்ணப்பம் பின்வரும் வழிகளின் மூலம் செய்யலாம்:
- இந்திய விசா அதிகாரப்பூர்வ இணையதளம்
- Indian Visa Su-Swagatam மொபைல் செயலி
- விமான நிறுவனங்கள் வழங்கும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது
இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, காகித வடிவப் படிவங்கள் இன்னும் ஆறு மாதங்கள் வரை கிடைக்கும், அதன் பிறகு முழுமையாக டிஜிட்டல் முறைமைக்கு மாறப்படும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இரண்டும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தி, டிஜிட்டல் குடிவரவு முறைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மடக்கிப் பிடிப்பு!
‘அஜித்குமார் ரேஸிங்’ சாதனை: அஜித்தை காண ரசிகர்கள் குவிந்தனர்!

ஸ்பெயின் ரேஸ் களத்தில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கு
காகிதத்தில் வீடு கட்டிக் கொடுத்த அரசாங்கம்! [Tuesday 2025-10-14 07:00]
![]() வீடு கட்டும் காணி அடையாளப்படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்கப்படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்குக் காணியும், வீடும், தருகிறோம் என எழுதிக்கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |





