புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஜூலை, 2019

ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்ற நபரே மகரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்