இதனால், வில்னியஸை நோக்கிய பல விமானங்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “கவனம்: வில்னியஸ் விமான
நிலையத்தின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இது உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.45 மணி வரை நீடிக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய வாரங்களில் ஐரோப்பியாவில் ட்ரோன் நடவடிக்கைகள் மற்றும் அனுமதியில்லாத வான்வழி நுழைவுகள் காரணமாக கோபன்ஹேகன் மற்றும் ம்யூனிக் விமான நிலையங்கள் உட்பட பல இடங்களில் வான்வழிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், வில்னியஸ் விமான நிலையமும் சமூக ஊடகங்களில், “எங்கள் தகவல்படி, வில்னியஸ் நோக்கி பலூன்கள் வருவதாகக் கூறப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சில விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது.
பயணிகள் தங்களது பயணம் குறித்து விமான நிலைய இணையதளம் மற்றும் விமான நிறுவனங்களின் அறிவிப்புகள் மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேட்டோவில் உறுப்பினராக இருக்கும் லிதுவேனியா, ஆகஸ்ட் மாதத்தில் பெலாரஸ் எல்லைக்கு ஒட்டிய 90 கிலோமீட்டர் நீள வான்வெளியை ‘பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதி’யாக அறிவித்தது. பெலாரஸிலிருந்து நுழையும் ட்ரோன்களை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உக்ரைனுக்கு வலுவான ஆதரவாளரான லிதுவேனியா, ரஷ்யாவுடன் நெருக்கமான கூட்டாளியான பெலாரஸுடன் 679 கிலோமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்ளுகிறது. வில்னியஸ் நகரம் அந்த எல்லையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.