புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2016

வித்யா கொலை வழக்கு! மரபணு அறிக்கையை சமர்பிக்க தவறினால் பிடியாணை

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் 11ம், 12ம் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று
ஆஐர் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கண்கண்ட சாட்சியாக குற்றப்புலனாய்வு துறை பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்ட 11ம் சந்தேகநபர் தாம் கண்கண்ட சாட்சி இல்லை என கூறியதையடுத்து முறையாக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு நீதிபதி எம்.வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
11ம், 12ம் சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஐர் செய்யப்பட்டு சாட்சி வாக்குமூலம் பதிவு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சந்தேக நபர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, வித்தியா பாடசாலை செல்வதை பார்த்தீர்களா கேட்ட போது, சந்தேக நபர்கள் தாம் அதனை பார்க்கவில்லை என கூறியதையடுத்து, குறித்த சந்தேகநபர்களிடம் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குற்றப்புலனாய்வு துறை பொலிஸாரிடம் வித்தியா கொலை தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கை எதற்காக இன்னும் கிடைக்கவில் லை என நீதிபதி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த குற்றப்புலனாய்வுதுறை
பொலிஸார் குறித்த மரபணு பரிசோதனைகளை மேற்கொண்ட ஜென்டெக் நிறு வனம் அறிக்கையை கொடுக்கவில்லை என கூறியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நிறுவனத்திடம் அறிக்கையை விரைவுபடுத்தி பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையேல் நிறுவனத்தின் பணிப்பாளருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்குமாறும் நீதிபதி பணித்துள்ளார்.

ad

ad