புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2016

கனடாவில் கட்சி தாவினார் ராதிகா சிற்சபைஈசன்!

இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில்
, ஒன்ராரியோ லிபரல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
தேசிய ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிடுவதற்காக, ஒன்ராரியோ லிபரல் கட்சியிடம் வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்துள்ளார்.
ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதியின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பால்க்கிசூன் கடந்த மாதம் திடீரென பதவி விலகியதை அடுத்து நடக்கவுள்ள இடைத் தேர்தலில், போட்டியிடவே, ராதிகா சிற்சபைஈசன் வேட்புமனுவைக் கையளித்துள்ளார்.
எனினும், ஒன்ராரியோ லிபரல் கட்சி இன்னமும் இவரைப் போட்டியில் நிறுத்துவது குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை.
கடந்த ஒக்ரோபர் மாதம் நடந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில், ராதிகா சிற்சபைஈசன், தேசிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தேசிய ஜனநாயக கட்சி, இந்த தேர்தலில் ரொரன்ரோவில் முற்றுமுழுதாக தோல்வி கண்டது.இந்த தேர்தலில் ராதிகா, 22 வீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
இவரை விட 10 ஆயிரம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று லிபர் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார்.

ad

ad